அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர நடவடிக்கை நிலையத்தில் இறுதிநேர முன்னெச்சரிக்கை அமைப்புகளுக்கான பல்-பங்காளர்களின் ஈடுபாட்டின் தற்போதைய நிலை
35,000 உயிர்களைக் காவுகொண்ட, இருபதில் ஒருவரை இடம்பெயரச் செய்த 2004 ம் ஆண்டின் இந்துசமுத்திர சுனாமி அனர்த்தமானது இலங்கைக்கான திறனான தேசிய முன்னெச்சரிக்கை அமைப்புக்கான (NEWS:SL) முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்தியது. இத்தேவையை பூர்த்தி செய்வதற்கு, சமீபத்தில் அடிக்கடி ஏற்பட்ட இரு அனர்த்தங்களான 1978 சூறாவளி மற்றும் 2003 வெள்ளத்தின் பின்னர் கலந்துரையாடப்பட்ட விடயங்களை இனியும் பிற்போட இயலாது. பொதுமக்கள் எச்சரிக்கை என்பது ஆபத்து ஒன்றின் அடையாளம் காணல், கண்டறிதல், மற்றும் இடர் மதிப்பீடு, ஆபத்திலுள்ள மக்களின் ஏதுநிலையின் துல்லியமான அடையாளம் காணல் மற்றும் இறுதியாக ஏதுநிலை சமூகத்திற்கு போதுமான நேரத்தில், ஆபத்து தொடர்பான தகவல்களை தொடர்பாடல் செய்தல் மற்றும் தெளிவூட்டல் ஆகியவற்றை கொண்ட ஒரு தொகுதி. எனவே அவர்கள் பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க உதவும். எச்சரிக்கையானது ஆபத்துகள் அழிவுகளாக மாறுவதை தடுப்பதற்கு பொதுமக்களுக்கு உதவும். திறனான பொதுமக்கள் எச்சரிக்கையானது உயிர்களைக் காத்தல், பொருளாதார இழப்புகளைக் குறைத்தல், அதிர்ச்சிகள் மற்றும் சமூக இடையூறுகளைக் குறைத்தல் மற்றும் நம்பிக்கையை ஏற்படுத்தல் மற்றும் பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். இது சிறப்பான பொருளாதாரத்தின் அடித்தளத்திற்கான முக்கியமான பகுதியாகும். திறனான எச்சரிக்கை என்பது தணித்தல், தயார்நிலை, எதிர்வினை மற்றும் மீட்பு உள்ளடங்கியதான விரிவான இடர் முகாமைத்துவத் தொகுதி என்பதை அடையாளம் கண்டு கொள்ளும். எச்சரிக்கையானது முழுதான இடர் முகாமைத்துவத் தொகுதியின் முக்கியமான, ஆனால் 2004 இந்துசமுத்திர சுனாமியின் போது தோற்றுப்போன கூறாகும்.