அவசர எச்சரிக்கைகள்

rss

தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டமானது பிரதான கட்டங்களான தணித்தல், ஆயத்தமாயிருத்தல், அவசர நடவடிக்கைகள், மற்றும் நிவாரணம், மீட்பு மற்றும் மீள்நிர்மாணம் போன்ற அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகளின் நோக்கமான நடவடிக்கைகளுக்கான முழுதான வழிகாட்டல் ஆவணமாகும். மேற்குறிப்பிட்ட கட்டங்களில் பயிற்சி, பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் கல்வி ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.

இந்த திட்டத்தை உபதேசிய (மாகாண மற்றும் மாவட்ட) நிர்வாக உத்தியோகத்தர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பொருத்தமான உத்தியோகத்தர்கள், சமூகத்தலைவர்கள், தனியார்துறை, சிவில் சமூகம், தொழில் வாண்மை நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைத்துப் பங்காளர்களும் பயன்படுத்துவார்கள்.

தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டமானது தொடர்பான தேசிய கொள்கைகளிலான ஏனைய திட்டங்களுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும். சட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி விடயங்களை உள்ளடக்கியதாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கான திட்டங்களும் கொள்கைகளும் திட்டத்தை தயாரிக்கும்போது உச்ச சாத்தியமான அளவுக்கு கவனத்தில் கொள்ளப்பட்டது. நடைமுறைப்படுத்தப்படும்போது அடையாளம் காணப்பட்ட குறைகளை இந்த திட்டங்களும் கொள்கைகளும் கவனத்தில் கொண்டன. மாகாண, உள்ளூராட்சி, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம அதிகாரி மட்ட நிர்வாகிகளும் இதற்கேற்ப தமது திட்டங்களைக் கொண்டுள்ளன. அனைத்து நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும், அரச சார்பற்ற நிறுவனங்களும் அடிமட்ட நிறுவனங்களும் தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டத்திற்கு ஒத்திசைவான தமது செயற்பாட்டு திட்டங்களைக் கொண்டிருப்பர்.

அனைத்து மட்டங்களிலும் பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்யப்படும் இவ்வாறான அனைத்துத் திட்டங்களும் பின்வரும் பிரிவுகளை உள்ளடக்கியதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டம் மற்றும் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்துடன் ஒத்திருக்க வேண்டும்.

 • இடர் மதிப்பீடு
 • அனர்த்த தடுப்பு மற்றும் தணித்தல் திட்டம்
 • அவசர எதிர்வினைக்கான அனர்த்த தயார்நிலைத் திட்டம்
 • மாற்றுத் திட்டங்கள்
 • அனர்த்த புனர்வாழ்வு மற்றும் மீள்நிர்மாண திட்டம்

அனைத்து மட்டங்களிலும் பல்வேறு துறைகளிலும் அனர்த்த முகாமைத்துவத் திட்டங்களின் ஒத்திசைவு

national disaster management plan ta

குறிக்கோள்

இலங்கையின் சமூகங்கள், உட்கட்டமைப்புகள், உயிர்நாடி வசதிகள், புகலிடம், விவசாய சொத்துகள், பொருளாதார மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் குறைக்கப்பட்ட அனர்த்தத்தின் தாக்கம்

இலக்கு

முழுதான குறிக்கோளை அடைவதற்காக தேசிய அனர்த்த முகாமைத்துவ கொள்கையை செயற்பாடுகளாக மாற்றுதல்

நோக்கம்

ஏற்கனவே விருத்தி செய்யப்பட்ட மற்றும் களத்தில் பரிசோதிக்கப்பட்ட எண்ணக்கருக்களை உபயோகித்து, தற்போதுள்ள முகவர்களின் திறனளவை அடையாளம் காணலும் மதிப்பீடு செய்தலும் ஊடாக அடையாளம் காணப்பட்ட கடமைகளை நிறைவேற்ற அவசியமான அவர்களின் திறனளவை விருத்தி செய்வதற்கும் இலங்கையில் அனர்த்த இடர் முகாமைத்துவத்துக்கான பொறிமுறைகளை தாபித்தல்/தொகுதி என்பது பல்துறை, அமைச்சுக்களுக்கிடையேயான மற்றும் முகவர்களுக்கு இடையேயான நடவடிக்கையாகும்.

தேசிய அனர்த்த முகாமைத்துவத் திட்டமானது, முகாமைத்துவ ஏற்பாடுகள், உறவுகள், பொறிமுறைகள், மூலோபாயங்கள் மற்றும் அனர்த்த இடர் முகாமைத்துவ சட்டவுருவைத் தாபிக்கும் நடவடிக்கை தொடர்பான பொருத்தமான கால வரம்புகளை வீச்சாக கொண்டுள்ளதுடன் நாட்டில் பல்-ஒழுங்கு, அமைச்சுக்களுக்கிடையேயான மற்றும் முகவர்களுக்கிடையேயான பல்-பங்காளர்களின் பங்களிப்பு போன்ற பல்துறை அணுகுமுறையுடனான பொருத்தமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும், ஐந்து வருடத்தினுள் முழு அனர்த்த முகாமைத்துவ சுற்றையும் கவரும் வகையில் அமைந்ததாகும். இது அனைத்து மட்டங்களிலும் அனர்த்த இடர் முகாமைத்துவத்தை கீழ்க்குறிப்பிட்ட முக்கிய பிரிவுகளை முழுமையாக கையாள்வதை கவனிக்கும்.

 1. நிகழ்வுக்கு முந்தைய நடவடிக்கைகள்
  1. தீங்கு மதிப்பீடு, ஏதுநிலை மற்றும் இடர் ஆய்வுஃமதிப்பீடு, ஆராய்ச்சி, தரவுத்தளங்கள்
  2. தணித்தல்
  3. தயார்நிலை

II. அவசர எதிர்வினை நடவடிக்கைகள் (தாக்கத்தின் போது மற்றும் தாக்கத்தின் பின்பு உடனடியாக)

III. அனர்த்தத்திற்கு பிந்திய நடவடிக்கைகள் (அனர்த்தத்திற்கு பின்னர் இடைக்காலம் மற்றும் நீண்டகாலம்): நிவாரணம் மற்றும் மீட்பு, இழப்பு மற்றும் சேத மதிப்பீடு, புனர்வாழ்வு, மீள்நிர்மாணம், உளவள மற்றும் அதிர்ச்சி ஆலோசனை, சமுதாயத்தை மீள் கட்டியெழுப்புவதற்கான நீண்டகால உதவி என்பது நிலைத்திருப்பதற்கு முக்கியமானதாகும்.

இத் திட்டத்திற்காக 2013 இலிருந்து 2017 வரையான ஐந்து வருட காலவரம்பு கருத்தில் கொள்ளப்படும். திட்டத்தை மேம்படுத்தல், அனைத்து பங்காளர்களின் பங்களிப்புடன் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் ஒருங்கிணைக்கப்படும். நாட்டு நிலைமை வேண்டி நிற்கும் வேளையில் அதாவது மீள்பார்வையின் 5 வருடத்தின் பின்னர், அல்லது பாரிய அனர்த்தமொன்றின் பின்னர், அல்லது திட்டத்தை மாற்ற வேண்டிய வேறு ஏதாவது நிலையில் திட்டத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவை முன்வைக்க வேண்டியது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பொறுப்பாகும்.

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052