rss

அனர்த்த இடர் குறைப்பு (DRR) என்பது குறுக்குவெட்டுக்களைக் கொண்ட சிக்கலான விடயமாகும். எனவே இதற்கு அரசியல் மற்றும் சட்ட அர்ப்பணிப்பு, பொதுமக்களின் புரிந்துணர்வு, விஞ்ஞான அறிவு, கவனமான அபிவிருத்தித் திட்டமிடல், கொள்கைகளையும் சட்டங்களையும் பொறுப்பாக அமுல்படுத்தல், மக்களை மையப்படுத்திய முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகள், மற்றும் திறனான இடர்களை எதிர்கொள்ளும் தயார்நிலைகள் மற்றும் எதிர்வினையாற்றும் பொறிமுறை போன்ற விடயங்கள் அவசியமாகும். பல பங்காளர்களைக் கொண்ட அனர்த்த இடர் குறைப்புக்கான தேசிய ஒருங்கிணைப்பு, இணைந்த அறிவு, திறன்கள் மற்றும்  அனர்த்த இடர் குறைப்புக்கு தேவைப்படும் வளங்களை வழங்கும் அல்லது ஒன்றுசேர்க்கும். மேலும் இது அபிவிருத்திக் கொள்கைகள், திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சிகளை பிரதான நீரோட்டத்தில் இணைக்கும்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரின் தலைமைத்துவத்தின் கீழ் தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுவின் கடமைகளும் பொறுப்புகளும் பின்வருமாறு:

  • இது ஒரு தேசியப் பொறிமுறையாகும். இதன்மூலம் நாடு ஒன்றோடொன்று தொடர்பான சமூக, பொருளாதார மற்றும் சூழல் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளலாம்.
  • இது அனர்த்த இடர் குறைப்புக்கான பரப்பில் அனர்த்த இடர் குறைப்புக்கான வளங்களை ஒதுக்குதல், நடவடிக்கைகள், கண்காணிப்பு, மீளாய்வு மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கான கால அட்டவணைகளை செயற்பாட்டுக்கான ஹையோகோ சட்டவுரு(HFA) மற்றும் பாதை வரைபடத்தின் அடிப்படையில்   முன்வைத்தலுக்கு உதவி புரியும்.
  • இது தேசிய பங்காளர்களிடையேயும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடையேயும் சிறந்த வளங்களுடனான செயற்றிறனான ஒருங்கிணைக்கப்பட்ட அனர்த்த இடர் குறைப்பு முயற்சிகளை முன்னெடுக்கும். இது துறைகள் மற்றும் பிரதேச எல்லைகளுக்கிடையே ஒரு முறையான சிந்தனை மற்றும் அர்ப்பணிப்புக்கான கட்டமைப்பை வழங்குவதன் மூலம் அபிவிருத்தி இலக்குகளுக்கு உதவி புரிகின்றது.
  • இது தேசிய கலந்தாலோசனை மற்றும் இணக்கப்பாட்டுக்காக சேவை புரியும் ஒரு இணைப்பாக செயற்படும் அதேவேளை அனர்த்த இடர் குறைப்புக்கான முன்னுரிமை அடையாளம் காண்தல் மற்றும் கொள்கை வகுப்பு, அனர்த்த இடர் குறைப்பு நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் ஒரு இணைப்பாக செயற்படும். இங்கு வலியுறுத்தப்படுவது அனர்த்த இடர் குறைப்பு நோக்கங்களை நோக்கிய முன்னேற்றத்தை முகாமைத்துவம் செய்வதேயன்றி ஒரு முடிவுப்பொருளாக 'திட்டம்' ஒன்றைத் தயாரிப்பது அல்ல. மற்றும்
  • இது நன்கொடையாளர்கள், அபிவிருத்தி வங்கிகள் மற்றும் அந்தந்த நாடுகளில் பிரதிநிதித்துவப்படுத்தாத ஐ.நா. முகவர் நிறுவனங்களிடமிருந்தான வளங்களை ஒதுக்குவதை வசதிப்படுத்துகின்றது. இது நாட்டுக்கான ஐ.நா. அலுவலகங்களுக்கு ஐ.நா. உதவியுடனான அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுள் அனர்த்த இடர் குறைப்பை ஒருங்கிணைப்பதற்கு உதவி புரிவதன் முக்கியத்துவத்தையும் தேவையையும் பரிந்துரைக்கப்படுவதனூடாக மேம்படுத்தப்படலாம்.

ஆரம்ப நடவடிக்கைகள்:

  • அனர்த்தம் மற்றும் இடர் வடிவங்கள், தேசிய கொள்கைகள், மூலோபாயங்கள், திறனளவுகள், வளங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கி  அனர்த்த இடர் குறைப்புக்கான அடிப்படை தகவல்களை தாபித்தல்
  • இலக்குகள், இடைவெளிகள், அக்கறைகள் மற்றும் சவால்கள் அடையாளம் காணலும் அனர்த்த இடர் குறைப்புக்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்னுரிமை பகுதிகளை முன்னிறுத்தலும்
  • அனர்த்த இடர் குறைப்புக்களுக்கு கொள்கைகள், சட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் தாபரிப்பதற்குமான அவசரத் தேவையை பரிந்துரை செய்தல்
  • அனர்த்த இடர் குறைப்புக்களை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தை அளவுகோடிடலும் அபிவிருத்தி கொள்கைகள், திட்டமிடல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பிரதான நீரோட்டத்தில் இணைத்தலும்
  • தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழுவுக்கு  அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க செயற்பாட்டுக்கான ஹையோகோ சட்டவுரு (HFA) மற்றும் "பாதுகாப்பான இலங்கையை நோக்கிய அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கான பாதை வரைபடத்தின்" அடிப்படையில் விளைவை நோக்காகக் கொண்ட வேலைத்திட்டமொன்றை அபிவிருத்தி செய்தல்
  • ஒப்பீட்டளவில் அதிக ஆபத்தை எதிர்நோக்கும் மக்களின் ஏதுநிலையைக் குறைப்பதற்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களிடையே இணைந்த முயற்சியை ஒருங்கிணைத்தல்
  • செயற்பாட்டுக்கான ஹையோகோ சட்டவுரு (HFA) மற்றும் 'பாதுகாப்பான இலங்கையை நோக்கிய அனர்த்த இடர் முகாமைத்துவத்திற்கான பாதை வரைபடத்தின்' அடிப்படையில் தேசிய மற்றும் சமுதாய மட்டத்தில் அனர்த்த இடர் குறைப்பு நடவடிக்கைகளை கண்காணித்தல், பதிவுசெய்தல் மற்றும் அறிக்கையிடல்.
  • கற்றுக் கொண்ட பாடங்களையும் சிறந்த நடைமுறைகளையும் ஆவணப்படுத்தலும் தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்தில் பகிர்ந்து கொள்ளல்
  • அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான உதவிகளில் தேசிய அபிவிருத்தி திட்டமிடல் கொள்கைகள், மற்றும் நிகழ்ச்சிகளுடன் அனர்த்த இடர் குறைப்பை சிறப்பாக ஒருங்கிணைப்பதற்காக வேலை செய்தல்
  • சமுதாயத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையைப் பலப்படுத்துவதற்கு சமுதாய அடிப்படையிலான/தலைமை தாங்குகின்ற அனர்த்த முகாமைத்துவ அணுகுமுறையை தேசிய மட்டத்தில் முன்னெடுத்தல்.
  • சமுதாய அடிப்படையிலான/தலைமை தாங்குகின்ற அனர்த்த முகாமைத்துவத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்காக தற்போதைய அனர்த்த இடர் முகாமைத்துவம்/அனர்த்த இடர் குறைப்பு (DRM /DRR) நடைமுறைகளில் பட்டறிவு ஆராய்ச்சிகளை முயற்சி செய்தல், இடைவெளிகளை அடையாளம் காணல் மற்றும் பொறிமுறைகளை உருவாக்குதல்.

News & Events

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052