Access to Examinations Amidst Disasters - Ordinary Level Examinations 2022-1க.பொ.த.சாதாரண தர பரீட்சைக் காலத்தில் அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தடுப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து வேலைத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துகின்றன. இதன்படி அனர்த்தங்களைக் குறைப்பதற்கு அனர்த்த முகரமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் இணைந்து அனர்த்த முன்னெச்சரிக்கைத் திட்டங்களை தயாரித்துள்ளன.

ஏதாவது அனர்த்தங்கள் மூலம் பரீட்சைக்குத் தோற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ நிலைய அவசர அழைப்பு இலக்கம் 117 அல்லது 1911 இல் பரீட்சைகள் திணைக்களத்தினால் நிறுவப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு அழைப்பதன் மூலம் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இம்முறை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எதிர் நோக்கும் அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்காக இத்தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் செயற்படுத்தப்படுகின்றன.

அதற்கேற்ப இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சையின் போது ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக அனர்த்த அபாயம் உள்ள மாட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான நிலைமைகளின் போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலதிக தகவல்களிற்காக இங்கு அழுத்தவும்;

Access to Examinations Amidst Disasters - Ordinary Level Examinations  12  Access to Examinations Amidst Disasters - Ordinary Level Examinations  1  Access to Examinations Amidst Disasters - Ordinary Level Examinations  13

 

Call Center

117
General: +94 112 136 136
Emergency Operation Center:+94 112 136 222 /
+94 112 670 002
Fax: +94 11 2670079