அவசர எச்சரிக்கைகள்

rss

பிரதான நடவடிக்கைகள்:

  • தேசிய அனர்த்த முகாமைத்துவ திட்டத்தையும் தேசிய அவசர நடவடிக்கைத் திட்டத்தையும் தயாரித்தல், மீள்பார்வை செய்தல் மற்றும் மேம்படுத்தல்.
  • மாகாண, மாவட்ட, உள்ளூராட்சி, பிரதேச மற்றும் கிராம அதிகாரி மட்டங்களில் அனர்த்த தயார்நிலைத் திட்டங்களை தயாரிப்பதை ஒருங்கிணைத்தல், நெறிப்படுத்தல் மற்றும் கண்காணித்தல்.
  • வைத்தியசாலைகளுக்கான அவசர எதிர்வினைத் திட்டங்களை தயாரிப்பதில் சுகாதார அதிகாரிகளுக்கு ஒருங்கிணைப்பும் உதவியும் வழங்கல்.
  • பாடசாலை அனர்த்த பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சுக்கு ஒருங்கிணைப்பும் உதவியும் வழங்கல்.
  • அவசர எதிர்வினைக்காக உள்ளூராட்சி சபைகளைப் பலப்படுத்தல்.
  • புயல், வெள்ளம், மண்சரிவுகள் போன்ற பல்வேறு ஆபத்துகளுக்கான எதிர்வினைத் திட்டங்களை விருத்தி செய்தல்.
  • அனர்த்தத்தின்போது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வெவ்வேறு ஆபத்துகளுக்கு ஏதுநிலை கொண்ட சமுதாயங்களை அடையாளம் காணலும் தயார்நிலை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தலும்.
    • அனர்த்த முகாமைத்துவ குழுக்களையும் உப குழுக்களையும் உருவாக்கல்
    • அனர்த்த முகாமைத்துவம், ஆபத்துகள், ஏதுநிலை குறித்த விழிப்புணர்வு
    • பாதுகாப்பான அமைவிடங்கள், பாதுகாப்பான  வழிகளைக் காட்டுகின்ற கிராமத்துக்கான ஆபத்து வரைபடத்தை தயாரித்தல்
    • ஒத்திகைகளை நடாத்துதல்
    • கிராமத்தினுள் முன்னெச்சரிக்கையை பரப்புவதற்காக ஒலிபெருக்கி போன்ற உபகரணங்களை விநியோகித்தல்
    • அவசர எதிர்வினைக்காக படகுகள், தோணிகள் போன்ற உபகரணங்களை விநியோகித்தல்

 

News & Events

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052