rss

தணித்தல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு, கட்டுமான, கட்டுமானமற்ற நடவடிக்கைகளின் அடிப்படையில் தேசிய மட்ட அனர்த்த தணிப்பு, இடர் குறைப்பு என்பவற்றுக்கு பொறுப்பாகும். இப்பிரிவு தேசிய மட்ட தகவல் தொழினுட்ப கட்டமைப்பு, இடர் ஆய்வு மற்றும் வரைபடம் போன்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தொழினுட்ப விடயங்களுக்கும் பொறுப்பானதாகும்.

பிரதான பொறுப்புகள்:

  • ஆபத்துகளை குறைப்பதற்கான கருத்திட்ட முன்மொழிவுகளை விருத்தி செய்தலும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தலும்.
  • அனர்த்த இடர் குறைப்பை அபிவிருத்தி செயன்முறை பிரதான நீரோட்டத்தில் இணைக்க உதவுதல்
  • அடையாளம் காணப்பட்ட இடர் விபரங்களை அடிப்படையாகக்கொண்ட பொது தகவல் தொகுதியை அபிவிருத்தி செய்வதை ஒருங்கிணைப்பு செய்தல்
  • இடர் ஆய்வுக்கான திறன் விருத்தி

ஏனைய பொறுப்புகள்:

  • தரவுகளைப் பகிர்வதற்கான மூலோபாயங்களையும் நியமங்களையும் அமைத்தல்
  • அவசர நிலையில் தரவுகளைப் பெற்றுக் கொள்ளவும் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஆய்வுசெய்யப்பட்ட தரவுகளை வழங்குவதற்காகவும் செய்மதித் தரவுகளை வழங்கும் நிறுவனங்களை வேலைத்திட்ட செய்மதிகளுக்கு தரவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல்
  • இடர் தணிப்பு செயற்பாட்டு திட்டங்களை விருத்தி செய்தல்
  • காணிப்பயன்பாடு திட்டமிடல் செயன்முறையில் அனர்த்த இடர் குறைப்பை ஒன்றிணைக்க உதவி புரிதல்
  • அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் திட்டமிடலுக்கும் கட்டட நிர்மாணத்திற்குமான வழிகாட்டல்களை விருத்தி செய்தல்
  • அனர்த்த முகாமைத்துவ நிலைய இணையத்தளம், தகவல் தொழினுட்பங்கள் மற்றும் தொடர்பாடல் உட்கட்டமைப்புகளை முகாமைத்துவம் செய்தல்
  • காட்டு யானைகள், முதலைகள் போன்ற விலங்குகளின் தாக்குதல்களுக்கான ஏதுநிலையைக் குறைப்பதற்கு பொருத்தமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு செய்தல்
  • இடர் மாற்றீடு பொறிமுறையை (நுண் காப்புறுதி, ஆயுள் மற்றும் சொத்து காப்புறுதி) பலப்படுத்துவதில் உதவி புரிதல்.
காணிப்பயன்பாடு திட்டமிடல் செயன்முறையில் அனர்த்த இடர் குறைப்பை ஒன்றிணைக்க உதவி புரிதல்

News & Events

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052