அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடனான சிறந்த ஒருங்கிணைப்பை நோக்கி நகர்வதற்கு கடமைகள், பொறுப்புகள் தொடர்பான படையினரதும் காவற்றுறையினதும் திறனளவு மேம்படுத்தப்பட்டதுடன் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்துக்கான பலதரப்பட்ட எதிர்வினைகளுக்கான நடைமுறைகள் அமைந்திருப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இடைப்பட்ட காலத்தில், அனர்த்தங்களுக்கிடையில், சமூகத்தையும் எதிர்வினையாளர்களையும் தயார்ப்படுத்துவதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும் காவற்றுறை மற்றும் இராணு பாத்திரதாரர்களுக்குமிடையில் தொடர்பாடல் முறைகளுக்கும் உறவைக் கட்டியெழுப்பவும், இவ்விடயத்தில் நடைமுறைகளைத் தாபிக்கவும் அனர்த்தங்களுக்கிடையில் செயற்படுவது முக்கியமானதாகும். விரிவுபடுத்தப்பட்ட, நாட்டுக்குப் பொருத்தமான சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு வழிகாட்டல்கள், ஒருங்கிணைப்பை வசதிப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் பிரச்சினை தீர்த்தல் போன்றவற்றில் சிறந்த ஸ்தானத்தில் நிற்பதோடு இதனால் ஏதுநிலை சமூகத்திற்கு வினைத்திறனான மனிதாபிமான நடவடிக்கைகளை வழங்க முடியும்.